157 பேர் பலியான சோகம்.... விமானத்தின் கருப்புப்பெட்டிகள் மீட்பு

share on:
Classic

150-க்கும் மேற்பட்டோருடன் விபத்திற்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் கருப்புப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

விமான விபத்து:
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றது. விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் அந்த விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. இதையடுத்து, அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் 149 பயணிகள், விமானிகள், பணியாளர்கள் என 8 பேர் உட்பட 157 பேர் பயணித்தனர். இந்தியர்கள் நால்வர் உட்பட அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் கசிந்தது. இந்நிலையில், விபத்திற்குள்ளான விமானத்தின் 2 கருப்புப்பெட்டிகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கருப்புப்பெட்டிகளின் உதவியோடு, விமானம் விபத்திற்குள்ளானதன் உண்மைக்காரணம் என்னவென்ற தகவலை பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருப்புப்பெட்டி என்றால் என்ன?...
பொதுவாக நான்கரை கிலோகிராம் எடையுடைய கருப்புப்பெட்டியைக் கொண்டு தான் விமானம் விபத்திற்குள்ளானது எப்படி என்ற உண்மைத் தகவலை பெற முடியும். இதனால் தான், விமானத்தின் மிக மிக இன்றியமையாத பாகமாக கருப்புப்பெட்டி திகழ்கிறது . 'கருப்புப்பெட்டி’ என்ற பெயரைக் கேட்டதும் அதன் நிறம் கறுப்பாகத் தான் இருக்கும் என்று நினைப்பது தவறு. கருப்புப்பெட்டிகள் பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். மற்ற நிறங்களைக் காட்டிலும் ஆரஞ்சு நிறம் மிகவும் பிரைட்டாக இருப்பதால் எந்தவொரு சூழலிலும் இந்த நிறத்தை எளிதாக அடையாளம் காண முடியும். இதன் காரணமாகவே கருப்புப்பெட்டியில் ஆரஞ்சு நிறம் பயன்படுத்தப்படுகிறது. 

கருப்புப்பெட்டியில் பொதுவாக இரண்டு ரெக்கார்டர்கள் அமைந்திருக்கும். ஒன்று FDR  எனப்படும் flight data recorder, இரண்டாவது CVR  எனப்படும் cockpit voice recorder... இந்த 2 ரெக்கார்டர்கள் அடங்கிய கருப்புப்பெட்டியானது விமானத்தின் வால் பகுதியின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும். விபத்து ஏற்படும் போது கருப்புப்பெட்டிக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இது வால் பகுதியில் நிறுவப்படுகிறது. 

காற்றின் வேகம், உயரம், வேகம், எரிவாயு ஓட்டம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இந்த  FDR-ல் பதிவாகும். CVR-ல் பைலட்டுகளின் உரையாடல்கள், காற்றின் சத்தம், மற்ற விமானங்களின் ஒலி உள்ளிட்டவை பதிவாகும். இந்த ரெக்கார்டர்களில் தகவல்களை சேமிப்பதற்காக solid-state மெமரி போர்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை மெமரி போர்டுகளைக் கொண்டுள்ள விமானத்தை  700 பேராமீட்டருக்கும் அதிகமான வித்தியாசத்தில் டிராக் செய்ய முடியும். 

கடலுக்கடியில் சென்றுவிட்டால் கூட கருப்புப்பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம். விமானம் ஏதாவது விபத்திற்குள்ளானால் அதன் கருப்புப்பெட்டியிலிருந்து நாளொன்றுக்கு ஒரு முறை வீதம், தொடர்ந்து 30 நாட்கள் மெல்லிய ஒலி எழுப்பப்படும். இந்த 30 நாட்கள் என்பது கூட கருப்புப்பெட்டியில் இருக்கும் பேட்டரி தீரும் வரை மட்டுமே. 

FDR ரெக்கார்டரைச் சுற்றிலும் டைட்டானியம் அல்லது ஸ்டெயின்லஸ் ஸ்டீல் காப்பான் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காப்பான்களை சோதனை செய்த விஞ்ஞானிகள் சாதாரணமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. FDR ரெக்கார்டரை அழிக்க மணிக்கு 1,100 டிகிரி செல்சியஸ் நெருப்பு, ஆயிரக்கணக்கான லிட்டர் உப்பு நீர், செறிவான விமான எரிபொருள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினர் விஞ்ஞானிகள். ஆனால், இவை எவற்றாலும் FDR ரெக்கார்டரை அசைக்க கூட முடியவில்லை. ஒரு விமானத்தில் கருப்புப்பெட்டியை பொருத்துவதற்கு முன்பாக இதுபோன்ற பல்வேறு கட்ட கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பிறகே அது பயன்பாட்டிற்கு வருகிறது. 

 

கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பின் கதை:
1934-ஆம் ஆண்டு Bass Strait விமான விபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் டேவிட் வாரன் என்பவரின் தந்தை உயிரிழந்தார். தமது தந்தைக்கு ஏற்பட்ட துயர முடிவு உலகில் வேறு எந்த விமான பயணிக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக டேவிட் வாரன்,  விஞ்ஞான கண்டுபிடிப்பு முயற்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கினார். இந்த ஆய்வில், விமான விபத்துக்களை தடுக்கவே முடியாது என்பதை உணர்ந்த டேவிட், விமானம் விபத்திற்குள்ளானது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவாவது ஒரு கருவியை கண்டுபிடிக்க ஆயத்தமானார். பல ஆண்டு முயற்சிக்கு பிறகு ARL Flight Memory Unit  என்ற கருவியை டேவிட் கண்டுபிடித்தார். இது தான் உலகின் முதலாவது கருப்புப்பெட்டி. ஆனால் இந்த கண்டுபிடிப்பை 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மட்டும் இந்த ARL Flight Memory Unit-ஐ  நடைமுறைக்கு கொண்டு வந்தன. இதன் பிறகே, அனைத்து நாடுகளும் இந்த சாதனத்தை பயன்படுத்தத் தொடங்கின. இதனால் தான் கருப்புப்பெட்டியின் கண்டுபிடிப்பு நாடாக இன்று வரை திகழ்கிறது ஆஸ்திரேலியா.

News Counter: 
100
Loading...

mayakumar