எதிர்க்கட்சிகள் வெறுப்பை விதைத்தாலும், மக்கள் அன்பை மட்டுமே வழங்குவர் - பிரதமர் மோடி

share on:
Classic

எதிர்கட்சிகள் விமர்சிக்கும் அளவுக்கு மக்கள் என்னை விரும்புவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தனக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களை மக்களிடம் எதிர்கட்சிகள் விதைப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தனக்கு அன்பை மட்டுமே திருப்பித் தருவார்கள் என்றும் தெரிவித்தார். பொதுவான பிரதமர் வேட்பாளரை கூட தேர்தெடுப்பதில் எதிர்கட்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும், சாடினார். மேற்குவங்கத்தில் நடைபெற்ற கலவரத்துக்கு மம்தா பானர்ஜி அரசு காரணம் என குற்றம்சாட்டிய பிரதமர் மோடி,  சேதமடைதந்த ஈஸ்வர் சந்திர வித்யசாகர் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், கோட்சே தேசப் பற்றாளர் என்றால், நான் தேச விரோதியாக இருந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.  மேற்கு வங்க கலவரத்துக்கு அம்மாநில மக்கள் காரணமல்ல என்றும், வெளியில் இருந்து ஒரு கட்சியால் அழைத்துச் செல்லப்பட்டவர்களே கலவரத்துக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Ramya