எல்லோருக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது - தம்பிதுரை 

Classic

தமிழ் மண்ணில் எல்லோருக்கும் தமிழ் உணர்வு இருப்பதால் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். 

கரூரில் உள்ள தனியார் அரங்கில்  2-வது புத்தக திருவிழாவின் துவக்க விழா  மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்கள் மற்றும்  முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

10-நாட்கள் நடைபெறும், இந்த புத்தக திருவிழாவை குத்துவிளக்கேற்றி  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை துவக்கி வைத்தார். இவ்விழாவில் பல்வேறு தலைப்புகளில் புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனைக்கும் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டு இருந்தது. 

இதனைத்தொடர்ந்து பேசிய தம்பித்துரை தமிழ் மண்ணில் எல்லோருக்கும் தமிழ் உணர்வு இருப்பதால், புத்தகங்கள் நன்கு வாசிக்க வேண்டும் என்றார்.

News Counter: 
100
Loading...

aravindh