அமைதியான சூழல் ஏற்பட அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் : சிறிசேனா

share on:
Classic

தீவிரவாத தாக்குதல் நடத்தபட்ட இலங்கையில், அமைதியான சூழல் ஏற்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய தலைவர்களுடன் இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பேசிய சிறிசேனா, அடிப்படைவாத சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டினால், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கிடையே காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது என கூறினார். இலங்கையில் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும், மிகுந்த ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக பாதுகாப்புத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், இலங்கையில் அமைதியான சூழல் ஏற்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan