"எல்லோரும் ஏழை என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது" - ப.சிதம்பரம்

share on:
Classic

எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என இடஒதுக்கீடு விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக நலித்த பொதுப்பிரிவினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் எல்லோரும் ஏழை என்றால்; ஏற்றுக்கொள்ள முடியாது என விமர்சித்துள்ளார். மாதம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஏழை, 6,000 ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஏழை. இது எப்படி இருக்கு என கேள்வி எழுப்பியுள்ள அவர், பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி பேர் ஏழைகளாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind