சேனல்களுக்கான 'புதிய கட்டண விதி' பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும்...

share on:
Classic

பிப்ரவரி 1 முதல் தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இதில் பொதுமக்களுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கின்றன அவற்றை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கட்டண விதியில் இடம் பெற்றிருக்கும் முக்கிய குறிப்புகள்.

புதிய கட்டண விதி படி பார்த்தால் ஒரு மாதத்துக்கு 130 ரூபாயுடன், 23.40 ரூபாய் ஜிஎஸ்டி சேர்த்து 153.40 ரூபாய் டெபாசிட் செய்தால் 100 சேனல்கள் இலவசமாக வழங்கப்படும். இதை தவிர்த்து வேறு எதாவது கட்டணமில்லா சேனலை பார்க்க விரும்பினால், 23.60 ரூபாய் செலுத்தி 25 சேனல்களை பெற்றுக்கொள்ளலாம். மற்ற கட்டண சேனல்களுக்கு ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

இலவச சேனல் தொகுப்பில் மொத்தம் 100 சேனல்கள் இருக்கும். முக்கியமாக இதில் தூர்தர்சனை சேர்ந்த 26 சேனல்களும் கட்டாயம் இருக்கும். இலவச சேனல்களை நீக்க முடியாது.

இந்த இலவச சேனல் தொகுப்பில் திரைப்படம், குழந்தைகள்,பொழுதுபோக்கு, விளையாட்டு, இசை, அறிவியல் போன்ற 5 வித்தியாசமான பிரிவுகளின் அடிப்படையில் தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

சேனல்களின் கட்டணங்கள் குறித்த விவரங்கள், அந்தந்த சேனல் இணையதளங்களில் இருக்கும். மேலும் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உங்கள் DTH அல்லது கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம்.  

வாடிக்கையாளர்கள் தங்களது விருப்ப சேனல்களை மாதந்தோறும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்.

DTH மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்களும் ஒரே விலையில் தான் சேவை வழங்க வேண்டும்.

தமிழ் சேனல்களில் பொதிகை, கலைஞர் டிவி, புதியதலைமுறை போன்ற சேனல்கள் இலவச லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. அதை தவிர்த்து மற்ற பிராந்திய மொழி சேனல்களும் இப்போதைக்கு அதில் இடம் பெற்றிருக்கிறது. இது மாற்றப்படவும் வாய்ப்பிருக்கிறது. எனினும் மக்கள் விரும்பி பார்க்கும் சன், ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற சேனல்களை கட்டணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும்.  

முன்பெல்லாம் மாதம் மாதம் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெறும் கணக்குக்கு பல தேவையற்ற சேனல்கள் வழங்கப்பட்டன. ஆனால் எந்த பயனும் இல்லை. இந்த புதிய விதிப்படி இனி உங்களுக்கு தேவையான சேனல்களை மட்டும் பெற்று கொள்ளலாம்.  

எல்லாவற்றையும் வைத்து பார்த்தால் ஒரு மாதத்திற்கு குறைந்தது 200 ரூபாயாவது செலுத்தினால் தான் இனி தொலைக்காட்சி பார்க்க முடியும்.

"இந்த புதிய கட்டண விதிகள் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இன்னும் சில மாதங்களுக்கு பிறகு தான் ஏதாவது மாற்றங்கள் கூட கொண்டு வரப்படும்" என்று TRAI நிறுவனம் கூறியுள்ளது.  

இன்னொரு சூட்சமம் என்னவென்றால் விலையுர்ந்த சேனல்களை மக்கள் ஆரம்பத்தில் இருந்தே தவிர்க்க ஆரம்பித்தால் வேறு வழியின்றி அவர்கள் தங்கள் கட்டணத்தை குறைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எளிமையாக சொல்வதென்றால் எப்படி ஜியோ வந்த பிறகு மற்ற நிறுவனங்கள் தங்களுடைய கட்டணத்தை குறைத்ததோ அதே போல் இதிலும் நடக்கும் என்று கூறப்படுகிறது.  

விளம்பரங்கள் மூலம் தான் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருமானமே. இந்நிலையில் கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல்களில் இனி ஒரு மணிநேரத்திற்கு 12 நிமிடங்களுக்கு மட்டும் தான் விளம்பரங்கள் இடம்பெற வேண்டும் என்ற அணுகுண்டையும் தூக்கி போட்டுள்ளது TRAI.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu