குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

share on:
Classic

தேனி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குதிரைகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டன.

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டகுடி, குரங்கணி, காரிப்பட்டி, கொழுக்குமலை, சென்ட்ரல் டாப் ஸ்டேஷன், கன்னக்கரை, போடிமெட்டு உள்ளிட்ட மலைகிராமங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு, அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர். 

சில மலைக் கிராமங்களுக்கு செல்ல சாலை வசதிகள் இல்லாததால் குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.  மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுசெல்லும்போது, நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் கூடுதல் பாதுகாப்புக்காக சென்றனர்.

இதே போல, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சாலை வசதி இல்லாத மலைகிராமங்களுக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. சின்னூர், பெரியூர், ஆகிய இரண்டு மலைக் கிராமங்களுக்கு பெரியகுளம் வழியாக பொதி சுமக்கும் குதிரைகள் மூலம்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பாதுகாப்புக்காக போலீஸார் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind