வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் : இரவு பகலாக பாதுகாப்பு பணியில் எதிர்க்கட்சியினர்..

share on:
Classic

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சியினர் இரவு பகலாக இயந்திரங்கள் உள்ள அறைகளை பாதுகாத்து வருகின்றனர். 

உத்திரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக 22 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. முதலில் விவிபேட் இயந்திரங்களின் சீட்டுக்களை சரிபார்க்க வேண்டும் எனவும், ஒப்புகை சீட்டுகளுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் முரண்பாடு இருந்தால் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.

7 கட்டங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியிலேயே இரவு பகலாக அமர்ந்து எதிர்க்கட்சியினர் கண்காணித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம், சண்டிகர், மும்பை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவிலிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்து வருகின்றனர். 

News Counter: 
100
Loading...

Ramya