தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு..!

share on:
Classic

பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

1998 - ஆம் ஆண்டு பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில், அதிமுக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்தது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind