தடயவியல்துறை பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

share on:
Classic

தமிழக அரசின் தடயவியல்துறையில் 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தடயவியல் துறைக்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 24-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எம்.எஸ்சி.தடயவியல், விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 

எழுத்துத்தேர்வில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 200 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் 100 கேள்விகளும்  கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.  தகுதியுடைய முதுகலை பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 22-ம் தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

aravind