சரும பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டுமா......!!

share on:
Classic

இன்றைய இயந்திர உலகில் நாம் தினமும் வெயில், புகை, தூசு என நமது சருமத்திற்கு எதிரான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இவற்றிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க இயற்கையான சிறந்த அழகு குறிப்புகளை பார்ப்போம்.

கருவளையம் குணமடைய :
கண்களுக்கு கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் கருவளையத்தில் இருந்து முற்றிலும் விடுபடலாம். 

உதடுகளில் மாற்று நிறம் மறைந்து பழைய நிறத்தை அடைய : 
மேல் உதடு ஒரு நிறமாகவும் ,கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்தி கீரையை பச்சை பயிறு சேர்த்து அறைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே நிறமாக மாறி தன் பழைய நிலையை அடைந்துவிடும்.

வறண்ட சருமம் ஜொலிக்க :

வறண்ட சருமத்தை மிருதுவாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சிறிய கேரட், சிறிதளவு தேங்காய் பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்கடலை போன்ற பருப்பு வகைகளை ஒரு வேளைக்கு இரண்டு வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் பிரச்சனைகள் தீரும்.

News Counter: 
100
Loading...

vinoth