மதுரை : சித்திரைத் திருவிழாவையொட்டி வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கபடுமா..?

share on:
Classic

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு பற்றி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான நடராஜன், சித்திரை திருவிழா நடைபெறும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறினார். அந்த பகுதிகளில், 33 வாக்குச்சாவடி மையங்களில், 112 வாக்கு சாவடிகள் உள்ளதாகவும், அங்கு வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 1950 என்ற தொலைபேசி எண் மூலம் வாக்காளர் விவரங்களை அறியலாம் என்றும் நடராஜன் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan