உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு...

Classic

உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது.

உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலம் டிசம்பருடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அந்த அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பது ஏன் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எனினும், கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

News Counter: 
100
Loading...

aravind