கண்கள் சோர்வாக காணப்படுகிறதா..? உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

இன்றைய காலக்கட்டதில் அதிக நேரம் வேலை செய்வதாலும் தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண்கள் சோர்வாக காணப்படுகிறது.

கண்சோர்வை போக்க சில வழிமுறைகளை பார்ப்போம் :

  • பஞ்சை பாலில் நனைத்து அதைக் கண்களின் மேல் வைத்து 20-30 நிமிடங்கள் வைக்க வேண்டும். இது கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
  • வெள்ளரிக்காயை சிறு துண்டாக நறுக்கி அதைக் கண்களில் வைத்து 25 நிமிடங்கள் ஓய்வெடுக்க கண்களின் சோர்வு நீங்கிவிடும்.
  • குளிர்ந்த நீரில் இரண்டு கரண்டிகளை 2 நிமிடம் ஊற வைத்து அந்த கரண்டிகளை கண்களில் ஒத்தி எடுத்தால் சோர்வு நீங்கும்.
  • முட்டையின் வெள்ளை கருவை கண்களில் தடவி 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்தால் சோர்வு முற்றிலும் நீங்கும்.
  • அதிகமாக நீரை அருந்திக் கொண்டே இருந்தால் உடலின் நீரேற்றத்தை அதிகரித்து கண் சோர்வை போக்கும்.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan