லண்டனில் நடைபெற்ற FA கோப்பைக்கான இறுதிப்போட்டி : மான்செஸ்டர் அணி வெற்றி..!!

share on:
Classic

லண்டனில் நடைபெற்ற FA கோப்பைக்கான இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றது. 

லண்டனின் வெம்ப்லே ((WEMBLEY) மைதானத்தில் நடைபெற்ற FA கோப்பைகான இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியுடன் வாட்ஃபோர்ட் (WATFORD) அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியது. சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் சிட்டி வீரர் டேவிட் சில்வா 26 வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து அசத்தினார். இதேபோல் 38, 61, 68, 81,87 ஆகிய நிமிடங்களிலும் மான்செஸ்டர் சிட்டி அணி கோல் மழை பொழிந்தது.  ஆட்ட நேர முடிவில் 6 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
 

News Counter: 
100
Loading...

Ramya