ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்

share on:
Classic

பயனாளர்களின் தகவல்களை, அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம், இவ்வாறு பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை இறுதியில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

janani