ஃபேஸ்புக் வைத்த செக்...!

share on:
Classic

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அரசியல் விளம்பரங்கள் தணிக்கை செய்யப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம்:
ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் 'கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் திருடப்பட்டு கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஃபேஸ்புக் இணை நிறுவனரும் தலைமை செயலதிகாரியுமான மார்க் ஸக்கர்பர்க் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் விஸ்வரூபம் எடுத்ததன் பிறகு ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதான பயனாளர்களின் நம்பிக்கைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 

அரசியல்வாதிகளுக்கு ஷாக்:
இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் தொடர்பாக ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிடும் முன்பாக உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அடையாள அட்டையுடன் கூடிய முன் அனுமதி பெற வேண்டும் என்றும், முறைகேடு நடக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் முறைகேடாக விளம்பரம் செய்யும் அரசியல் கட்சியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

பாஜக Vs. காங்கிரஸ்:
முன்னதாக, தேர்தல் வாக்குப்பதிவின் போது இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஆளுங்கட்சிக்கே வாக்குகள் செல்வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், அமெரிக்க தேர்தல் முறைகேடு போன்று இந்திய பொதுத்தேர்தலிலும் சட்டவிரோத செயல்பாடுகள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அசாதாரண தருணத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கை வெளியாகி உள்ளது. மறுபுறம், 'ஃபேஸ்புக்கின் அறிக்கை உங்கள் தொண்டர்களுக்காகவே வெளியிடப்பட்டுள்ளது' என தேசிய அரசியலில் பிரதான பங்கு வகிக்கும் 2 முக்கிய கட்சிகளின் விஸ்வாசிகள் பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர். 

News Counter: 
100
Loading...

mayakumar