மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ. 156 கோடி செலவு..!!

share on:
Classic

பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி, மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ. 156 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக 1 டாலரை அடிப்படை ஊதியமாக பெற்று வரும் ஜூக்கர்பெர்க்கின், பிற செலவினங்களுக்காக மட்டும், இந்திய மதிப்பில் ரூ. 156 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செலவினங்களின் பெரும்பகுதி ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. மேலும் ஜூக்கர்பெர்க்கின் பயணம் செய்யும் தனி விமானங்களுக்காக மட்டும் சுமார் ரூ. 18 கோடி அளவுக்கு செலவிடப்படுவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த ஒழுங்குமுறை அறிக்கையில் பேஸ்புக் நிறுவனம் இந்தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ. 62 கோடியாக இருந்த இந்த செலவினங்கள், 2018-ஆம் ஆண்டில் 2 மடங்கிற்கும் மேல் அதிகரித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan