மீண்டது ஃபேஸ்புக், வாட்ஸ் அப்..!

share on:
Classic

நேற்று மாலை முதல் முடங்கிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன.

இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கவந்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் நேற்று மாலை முதல் சரியாக இயங்காமல் முடங்கின. இதனால் பயனாளர்கள் தங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சமூக வலைத்தளங்கள் செயலிழந்ததால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்வதில் இருந்த சிக்கல் 100 சதவீதம் சரி செய்யப்பட்டதாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதனால் அதன் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan