டீ வில்லியர்ஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டு ப்ளெசிஸ்..!

share on:
Classic

தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் ஓய்விலிருந்து திரும்பி உலகக்கோப்பையில் ஆட விரும்புவதாகவும் அதற்கு தென் ஆப்பிரிக்க நிர்வாகம் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து கேப்டன் டு ப்ளெசிஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அணியின் கேப்டன் டு ப்ளெசிஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது “அணி அறிவிக்கப்படுவதற்க்கு முன் என்னிடம் தொலைபேசியில் பேசிய அவர், ஓய்வில் இருந்து திரும்பி உலகக்கோப்பையில் ஆட விரும்புவதாக கூறினார். நானும் பயிற்சியாளரிடம் பேசி பார்க்கிறேன் என கூறினேன். ஆனால் காலம் கடந்து விட்டது தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து விட்டனர். 99.9 % மாற்ற வாய்ப்பில்லை என கூறிவிட்டனர். இந்த சர்ச்சை விவகாரம் எங்கள் அணியை ஒருங்கிணைத்துள்ளது. இனி வரும் ஆட்டங்களில் நாங்கள் எங்கள் சிறப்பை அளிக்க முயற்சிப்போம்” என தெரிவித்தார்  

News Counter: 
100
Loading...

Saravanan