நடுவானில் பழுதான விமானம் : 112 பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கிய விமானி..!!

share on:
Classic

ஏர் கனடா விமானம் ஒன்று 112 பயணிகளுடன் அலாஸ்காவுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட பழுதால் அவசர அவசராமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் மேலே பறக்க தொடங்கியதும் விமானத்தில் பயணித்த மாண்டிரியாவை சேர்ந்த பயணியான கேட்டி யோகோவிச் விமான பணிப்பெண்கள் குளிர்பானங்களை வழங்கத்  தொடங்கினர். பிறகு சிறிது நேரத்தில் விமான ஊழியர் ஒருவர் உடனடியாக விமானத்தின் பின் பகுதியில் அமைந்திருக்கும் இருக்கைகளின் பின்னால் பொருத்தப்பட்டிருக்கும் திரைகள் செயலிழந்ததாகவும் தெரிவித்தார். விமானம் தரையிறக்கப்படுவதாக விமானி அறிவித்த நிலையில் விமானத்தில் அவ்வப்போது அதிர்வுகள் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட பிறகு தான் விமானத்தின் ஒரு எஞ்சின் பழுதாகி விட்டதாகவும் ஒரு எஞ்சினின் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் விமானி தெரிவித்துள்ளார். விமாணத்தை பத்திரமாக தரையிறக்கியதற்காக விமான ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

News Counter: 
100
Loading...

udhaya