பக்தர்களின் நோய் தீர்க்கும் விசித்திர குகை கோயில்..!!

share on:
Classic

கர்நாடகாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பிதர் நகரில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோயில், மனிசூல என்ற சிறிய மலைத்தொடரில் ஜர்னி நரசிம்மர் குகை கோயில் என்ற சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது. மற்ற மலைக் கோயில்களுக்கு செல்வது போல் இந்த கோயிலுக்கு எளிதில் செல்வது சற்று கடினம்.

இத்திருக்கோயிலின் கருவறையில் நரசிம்ம சுவாமி குடிகொண்டிருக்கிறார். பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்றால் 300அடி நீளமுள்ள குகைக்குள் நடந்து சென்றால் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த குகை முழுவதும் 4 முதல் 5 அடி வரை நீரால் நிறைந்திருக்கும் அதாவது மார்பளவு அல்லது கழுத்துவரை இருக்கும் நீரில் நடந்து சென்றால் மட்டுமே கருவறையை அடைந்து சுவாமியை தரிசனம் செய்ய முடியும். குகையின் இறுதியில் நரசிம்மரும், சிவலிங்கமும் மார்பளவு தண்ணீரில் மூழ்கியபடி தான் காட்சியளிக்கின்றனர். மேலும் நரசிம்ம  பெருமான் இரண்யகசிபுவை பிரகலாதனுக்காக வதம் செய்த பின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்தக் குகையில் வதம் செய்தார் என்றும், இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குகையின் மற்றொரு அதிசயம் என்னவென்றால் இந்த குகைக்கு வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு புரியாத புதிராகவே உள்ளது. இதனால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தத் தண்ணீரை அதிசய நீராகவே பார்க்கிறார்கள். மேலும் இந்த தண்ணீரில் பல மூலிகைகள் கலந்திருப்பதால் இதில் நடந்து சென்று சுவாமியை வழிபட்டால் பலவிதமான நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனாலேயே இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 

News Counter: 
100
Loading...

vinoth