நாகை மாவட்டம் குத்தாலத்தில் இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைகழகத்துக்கு சீல்

share on:
Classic

நாகையில் செயல்பட்டு வந்த போலி மருத்துவ பல்கலை கழகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நாகை மாவட்டம், குத்தாலத்தில் மாற்றுமுறை மருத்துவம் என்ற பெயரில், அகில உலக திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது. 12 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பல்கலைகழகத்துக்கு சென்ற ஊரக நலத்துறை இயக்குநரக அதிகாரிகள், சோதனை நடத்தினர். இதில், போலி பல்கலைக்கழகம் என்பதை கண்டுபிடித்ததுடன், ஆவணங்களை பறிமுதல் செய்து பல்கலைக்கழகத்துக்கு சீல் வைத்தனர். பல்கலைக்கழக நிர்வாக இயக்குநர் செல்வராஜ் என்பவரை தேடி வருகின்றனர். இந்த பல்கலைகழகத்தில் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் போலி மருத்து சான்றிதழ்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth