'ஐங்கரன்' படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!!

share on:
Classic

ஐங்கரன் படத்தை நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் தயாரிப்பாளரான லிம்பர புரொடக்‌ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து இப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் நடித்த சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மென் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர் நடிப்பில் இன்னும் சில படங்கள் ரிலீஸ்சாக உள்ளது..  

அப்படி அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ஐங்கரன் படமும் ஒன்று. காமன் மேன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜூன் மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஐங்கரன் படத்தின் தமிழ் நாடு வெளியீடு உரிமையை, நட்புன்னா என்னனு தெரியுமா.. படத்தின் தயாரிப்பாளரான லிம்பர புரொடக்‌ஷன்  நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan