தேசியக்கொடியுடன் தோனியின் காலில் விழுந்த ரசிகர்... தோனி என்ன செய்தார் தெரியுமா?...

share on:
Classic

காலில் விழுந்த ரசிகரின் கையிலிருந்த தேசியக்கொடியை பறித்த தோனியின் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

ரசிகர்கள் கூட்டம்:
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ரசிகர்களின் ஆரவாரங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. குறிப்பாக, மஹேந்திர சிங் தோனி எப்போதெல்லாம் டிஸ்பிளேயில் காண்பிக்கப்படுகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரங்கள் விண்ணைப் பிளந்தன. 

தோனியின் ’தல’ புராணம்:
நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது தோனி வழக்கம் போல் கீப்பிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மைதானத்தின் கடுமையான பாதுகாப்பையும் கடந்து ரசிகர் ஒருவர் தோனியை நோக்கி ஓடி வந்தார். தோனியை அருகில் பார்த்த சந்தோஷத்தில், கையில் வைத்திருந்த தேசியக்கொடியுடன் அவரது காலில் விழுந்தார். அப்போது, ரசிகரின் கையில் இருந்த தேசியக்கொடியை பறித்த தோனி அவரை உற்சாகப்படுத்தியபடி தழுவிச் சென்றார்.

தோனி தன்னை தொட்டதால் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற அந்த ரசிகர் துள்ளிக்குதித்து ஓடினார்.  ரசிகரின் இந்த செயலின் போது தோனி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய நிகழ்வை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தோனி புராணங்களே டிரெண்டிங்காகி வருகின்றது. 

 

தோனி ரசிகர்கள் ஏக்கம்:
நியூஸிலாந்து மண்ணில் இந்திய அணி விளையாடிய இத்தொடரின் கடைசி போட்டியை முன்னிட்டு, தோனிக்கு பிரியாவிடை அளிப்பதாகவும், அவரது ஆட்டத்தை எப்போது தான் மீண்டும் காண முடியுமோ என்ற ஏக்கத்துடன் காத்திருப்பதாகவும் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பதாகைகளை கைகளில் ஏக்கத்துடன் ஏந்திய வண்ணமிருந்தனர்.

எது எப்படியோ, இந்த மஹேந்திர சிங்கம் தோனியை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என்பது அவரது பக்தர்களுக்கே உரித்தான தனி பேராசை. இந்த பேராசையானது இப்போது 14வது முறையாக அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar