ஃபானி புயல் பாதிப்பை கணக்கிடும் பணிகள் : ஒடிசா சென்ற மத்திய குழுவினர்..

share on:
Classic

ஃபானி புயல் பாதிப்பை கணக்கிட 9 பேர் அடங்கிய மத்தியக்குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். 

கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் புரி பகுதியில் ஃபானி புயல் கரையை கடந்தது. இதனால் 14 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மா, தென்னை உட்பட 14 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான வீடுகளும், மின்கம்பங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்தன. புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது. விவசாய நிலங்களையும் புயல் விட்டுவைக்கவில்லை. மாநில அரசின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 30 சதவீதத்திற்கு அதிகமான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 1 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ் தலைமையில் 9 பேர் அடங்கிய மத்திய குழுவினர் பாதிப்புகளை கணக்கிட ஒடிசா சென்றுள்ளனர். 2 குழுக்களாக பிரிந்து, புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களான புரி, குர்தா ஆகிய பகுதிகளை இன்றும் நாளையும் பார்வையிட உள்ளனர். மே 15ம் தேதி மற்ற பகுதிகளை பார்வையிடும் அவர்கள், அதன்பிறகு தங்கள் அறிக்கையினை மத்திய அரசிடம் சமர்பிக்க உள்ளனர். 

News Counter: 
100
Loading...

Ramya