ஃபானி புயல் பாதிப்பு : மறுவாழ்வு பணிகளுக்கு ஹாங்காங் அரசு ரூ.62 கோடி வழங்க ஒப்புதல்..

share on:
Classic

ஃபானி புயல் பாதிப்பு இடங்களில் மறுவாழ்வு பணிகளுக்காக சுமார் ரூ. 62 கோடி நிதி வழங்க ஹாங்காங் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

கடந்த மே மாதம ஒடிசாவை தாக்கிய ஃபானி புயலால் 64 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாயந்தன. இதன் காரணமாக கடலோர மாவட்டத்தில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் ஹாங்காங் அரசு ஃபானி புயல் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், 9 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 62 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அங்கு வெளியாகும் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்தத் தொகை புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 45,100 பேருக்கு அடிப்படை வசதிகளான தண்ணீர், சுகாதார வசதிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு பயன்படும் விதமாக இருக்கும். மேலும் இந்த நிதியுதவி, சம்பந்த தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறியும் வகையில், நிவாரணத் திட்டங்கள் முடிந்தவுடன் அதுதொடர்பான தணிக்கை மதிப்பீடு அறிக்கைகளை தாக்கல் செய்யவும் அறிவுறத்தப்பட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

Ramya