வங்கதேசத்தை உலுக்கிய ஃபோனி புயல் : 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி..!

share on:
Classic

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபோனி புயல் வங்கதேசத்தை தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கோரதாண்டவமாடிய ஃபோனி புயல் தற்போது வங்கதேசத்தில் நிலை கொண்டுள்ளது. புயலில் தாக்கத்தால் வங்கதேசத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவோகாலி, பர்குனா ஆகிய பகுதியில் ஃபோனி புயல் தாக்கியதில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிழந்தனர். இந்த புயலானது மாலை 4 மணி வரை வங்கதேசத்தில் நிலை கொண்டிருக்கும் கூறப்படுகிறது. புயல் எதிரொலியாக வங்கதேசத்தின் 19 மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்புப் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை அசாம் நோக்கி ஃபோனி புயல் வலுவிழந்து நகரக்கூடும் என்பதால் அசாம் மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan