'விஸ்வாசம்' ரிலீசான தியேட்டரில், ரசிகர்களுக்கு கத்திக்குத்து..!

share on:
Classic

'தல' அஜித்தின் விஸ்வாசம் இன்று ரிலீசான நிலையில் அவரது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒரு பக்கம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற, மறு பக்கம் ரசிகர்கள் சிலர்  அடிதடியில் ஈடுபட்ட செய்தியும் வெளியாகியுள்ளது.

வேலூரில் திரையரங்கம் ஒன்றில் விஸ்வாசம் படத்தை பார்க்க ரசிகர்கள் காலை முதலே காத்து கிடந்தனர். தியேட்டர் கதவு திறந்ததும் ஆரவாரத்துடன் முந்தியடித்து ஓடி ரசிகர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்களில் சென்று அமர்ந்தனர். அப்போது நண்பர்கள் நான்கு பேர் பதிவு செய்த சீட்களில், இரண்டு பேர் தவறுதலாக அமர. வாக்குவாதத்தில் ஆரம்பித்த  சண்டை அடிதடியில் முடிந்தது. அப்போது அந்த நான்கு பெரும் தங்கள் வைத்திருந்த கத்தியால் அந்த இருவரையும் குத்தியுள்ளனர் .

இந்த சம்பவம் தியேட்டரில் இருந்த மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இருவருக்கும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். பட ரிலீசுகளின் போது ரசிகர்கள் வார்த்தை போர்களில் ஈடுபடுவது வழக்கமே, ஆனால் ஒரு படத்துக்காக கத்திக்குத்து வரை போன சண்டை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

News Counter: 
100
Loading...

aravind