ஓ.பி.எஸ். மகனுக்கு எம்.பி. என்று கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் கைது..!

share on:
Classic

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை எம்.பி. குறிப்பிட்டு கோயிலில் கல்வெட்டு 2 தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட இந்த கல்வெட்டால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதை அடுத்து ரவீந்திரநாத்குமாரின் தேர்தல் முகவர் அளித்த புகாரின் பேரில் கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குப்பதியப்பட்டு உள்ளது. அதிமுக தொண்டரான காவலர் வேல்முருகன் தொடர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan