ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்க தில்லை நடராஜரிடம் முறையிட்ட விவசாயிகள்..!

share on:
Classic

சிதம்பரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால், சுரபுன்னை காடுகளும் தில்லை மரமும் விவசாயமும் அழிந்து போகும் என்பதால் விவசாயிகள் நடராஜர் கோயிலில் மனு அளித்து முறையிட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கிள்ளை ரவிந்திரன் தலைமையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு விவசாயிகள் தில்லை மரக் கிளையுடன் நடராஜர் கோயிலுக்கு சென்று மனு அளித்து முறையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் விவசாயிகள், சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால் பிச்சாவரம் பகுதியில் உள்ள சுரபுன்னை காடுகளும் இயற்கை வளங்களும் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும் என்றும் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கவலை தெரிவித்தனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் சுரபுன்னை காடுகள் அழிந்தால் அதிலுள்ள நடராஜரின் தல விருட்சமான தில்லை மரமும் அழிந்துபோகும் என்பதால் தல விருட்சத்தைக் காப்பாற்றக் கோரி நடராஜரிடம் முறையிட்டதாகத் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan