மாமரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

share on:
Classic

பெரியகுளம் சுற்றுப்பகுதியில் மாமரங்களில் அதிகளவு பூக்கள் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தேனி மாவட்டம்  கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, காலேபாடி, இமாம்சந்து, செந்தூராம், கல்லாமை உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்ற. கடந்த ஆண்டு மாமரங்களில் 30 முதல் 40 சதவீத அளவில் பூக்கள் பூத்த நிலையில், இந்த ஆண்டு 70 முதல் 80 சதவீத பூக்கள் பூத்துள்ளது. இந்த பூக்கள் இன்னும் 15 நாட்களில் மடிந்து சிறு பிஞ்சுகளாக மாறும் என்பதால், அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind