தூத்துக்குடியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்..!

share on:
Classic

ஸ்ரீவைகுண்டத்தில் தண்ணீர் இன்றி கருகும் வாழைப் பயிர்களைக் காப்பாற்ற அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகால் பிரிவில் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. அதனால், தமிழக அரசு வாழைப் பயிர்களைக் காப்பாற்ற மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி புதுக்கோட்டையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan