ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்..!

share on:
Classic

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாகை அருகே விவசாயிகள் குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தமிழகத்தில் 272 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி உள்ளிட்டபல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விளைநிலங்களில் இயந்திரம் மூலம் குழாய் பதிக்கும் பணி நடந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நாகை மாவட்டம் பாலையூர் பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக குளத்தில் இறங்கி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind