நெற்றியில் நாமமிட்டு விவசாயிகள் போராட்டம்..!!

Classic

தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கியதாக கூறி தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றியிருப்பதாக மேட்டுப்பாளையத்தில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுபாளையத்தை அடுத்த தாசம்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நெற்றியில் பட்டை நாமமிட்டு போராடத்தில் ஈடுபட்டனர். அப்போது, மோகன கிருஷ்ணன் பரிந்துரைத்த அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ஒதுக்காமல், கோபி, பெருந்துறை பகுதிகளை உள்ளடக்கிய காலிங்கராயன் திட்டத்துக்கு அரசு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக கூறினர். இது திட்டமிட்டு விவசாயிகளை அரசு ஏமாற்றியிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழக அரசின் இந்த மோசடியை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் விவசாயிகள் கூறினர்.

News Counter: 
100
Loading...

vinoth