ஹாலிவுட்டின் மெகா ஆக்‌ஷன் படம்... டிரெய்லரைக் கண்டு மெர்ஸலான ரசிகர்கள்

share on:
Classic

ஹாலிவுட்டின் அடுத்த மெகா ஆக்‌ஷன் படத்தின் டிரெய்லர் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. 

டேவிட் லெயிட்ச் இயக்கத்தில், நடிகர்கள் வெயின் ஜான்ஸன், ஜேஸன் ஸ்டேதம், இட்ரிஸ் எல்பா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஃபாஸ்ட்&ஃபியூரியஸ் பிரெஸன்ஸ்: ஹாப்ஸ்&ஷா’. வின் டீஸல் கதாநாயகனாக நடித்திருந்த ’ஃபாஸ்ட்&ஃபியூரியஸ்’ பட வரிசைகள் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தன. இந்த பட வரிசைகளில் ’ஹாப்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் வெயின் ஜான்ஸனும், ’ஷா’ என்ற கதாபாத்திரத்தில் ஜேஸன் ஸ்டேதமும் நடித்து அசத்தியிருந்தனர். கதையின் ஆரம்பத்தில் எதிரிகளாக திகழும் இவ்விருவரும் பின்னர் தங்களின் பொதுவான எதிரியின் கதையை முடிப்பதற்காக கை கோர்த்து செயல்படுவார்கள். 

இந்த 2 முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு  ’ஃபாஸ்ட்&ஃபியூரியஸ் பிரெஸன்ஸ்: ஹாப்ஸ்&ஷா’ படம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இப்போது யூடியூபில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அசத்தியுள்ளது டிரெய்லர். வரும் ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. 
 

 

News Counter: 
100
Loading...

mayakumar