அதிக உடல் எடையால் அவதியா..? இனி கவலை வேண்டாம்..!!

share on:
Classic

தினமும் சாப்பிட கூடிய உணவுகள் தான் நமது உடல் எடையை கூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

கண்ட உணவுகளை கண்ட நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் நம் உடல் எடை அபரிமிதமாக கூடி விடும். இதனால்  உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க சில வழிமுறைகளை காண்போம்.

தேவையான பொருட்கள்:
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
தேன் (தேவைப்பட்டால்) - 1 டீஸ்பூன்

செய்முறை :
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம். இந்த கலவையை ஒரு நிமிடத்துக்குக் கலக்க வேண்டும். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விட வேண்டும். பிறகு உடல் எடை குறைந்து வருவதை நம்மால் உணரமுடியும்

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan