’The Favourite’ படத்திற்கு 7 பாஃப்டா விருதுகள்... வெற்றியாளர்கள் பட்டியல் இதோ

Classic

’The Favourite’ திரைப்படம் அதிகபட்சமாக 7 பாஃப்டா விருதுகளை வென்று அசத்தியுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருது Bohemian Rhapsody படத்திற்காக Rami Malek-க்கு வழங்கப்பட்டது. 

பாஃப்டா விருது:
குட்டி ஆஸ்கார் விருதாக கருதப்படுவது பாஃப்டா (British Academy of Film and Television Arts). சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு பிரிட்டிஷ் அகாடமியால் பாஃப்டா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 72-வது ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. 

பரிந்துரைப் பட்டியல்:
இந்த விருதை பெறுவதற்கான பரிந்துரைப் பட்டியலில் The Favourite படம் அதிகப்படியாக 12 பிரிவுகளின்கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, Bohemian Rhapsody, First Man, Roma, A Star Is Born உள்ளிட்ட படங்கள் 7 பிரிவுகளின் கீழும், Vice படம் 6 பிரிவுகளிலும் மற்றும் BlacKkKlansman படம் 5 பிரிவுகளிலும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீஸாகி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட படங்களில் இருந்து வெகு சில சிறந்த படங்களே பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இந்த சிறந்தவைகளில் இருந்து மிகவும் சிறந்தவை எது? அல்லது யார்? என்பது இறுதி செய்யப்பட்டு பாஃப்டா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பது. ரசிகர்கள் இம்முறை பெரிதும் எதிர்பார்த்தபடியே சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருதை Bohemian Rhapsody படத்திற்காக Rami Malek தன்வசப்படுத்தினார். 

The Favourite திரைப்படம் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக Roma  4 விருதுகளையும், Bohemian Rhapsody 2 விருதுகளையும் வென்றுள்ளன. இதேபோல், Black Panther, BlacKkKlansman, Green Book, Vice மற்றும் A Star is Born உள்ளிட்ட படங்கள் தலா ஒரு விருதையும் தட்டிச்சென்றன. பாஃப்டா விருது வென்று அங்கீகாரம் பெற்றுக்கொண்ட வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு,  

சிறந்த திரைப்படம் - Roma

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Spider Man: Into the Spider Verse

சிறந்த ஆவணப்படம் - Free Solo

ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம் - Roma 

சிறந்த இயக்குனர் - Roma, Alfonso Cuarón

சிறந்த நடிகர் - Rami Malek, Bohemian Rhapsody

சிறந்த நடிகை - Olivia Colman,  The Favourite

சிறந்த துணை நடிகர் - Mahershala Ali, Green Book

சிறந்த துணை நடிகை - Rachel Weisz, The Favourite

சிறந்த ஒளிப்பதிவு - Roma

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - The Favourite (Deborah Davis, Tony McNamara)

சிறந்த தழுவல் திரைக்கதை - BlacKkKlansman (Spike Lee, David Rabinowitz, Charlie Wachtel, Kevin Willmott)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - Black Panther 

சிறந்த படத்தொகுப்பு - Vice

சிறந்த ஒரிஜினல் இசை - A Star Is Born

சிறந்த ஒலி - Bohemian Rhapsody

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - The Favourite

சிறந்த ஆடை வடிவமைப்பு - The Favourite

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - The Favourite

சிறந்த பிரிட்டன் திரைப்படம் - The Favourite

சிறந்த பிரிட்டன் அனிமேஷன் குறும்படம் - Roughhouse

சிறந்த பிரிட்டன் குறும்படம் - 73 Cows

News Counter: 
100
Loading...

mayakumar