ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி புகார் - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

share on:
Classic

லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி அளித்த புகார் மீது ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி முருகனுக்கு எதிராக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகார் அளித்து ஆறுமாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுக தடுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபோன்ற வழக்குகளை கையாள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற மூத்த ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஏன் அமைக்க கூடாது என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

aravind