பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

share on:
Classic

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்குள்  உரிய அனுமதியின்றி நேற்றிரவு நுழைந்த வட்டாட்சியர் சம்பூர்ணம், சுமார் 2 மணி நேரமாக அங்கிருந்த ஆவணங்களை நகல் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அடுத்து அங்கு குவிந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு வந்த அமமுகவினர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திர அறையில் இருந்த ஆவணங்களை பெண் வட்டாட்சியர் நகல் எடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்

News Counter: 
100
Loading...

vinoth