போலீஸாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு

share on:
Classic

நிர்மலா தேவியை புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்த நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை திருவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலாதேவி விசாரணை முடிந்து அழைத்துச்செல்லப்பட்டார். வெளியே வந்த நிர்மலா தேவியை செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News Counter: 
100
Loading...

aravind