இணையத்தை கட்டிப்போட்ட பிஜி வாட்டர் கேர்ள் - தண்ணீர் கொண்டு வந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

share on:
Classic

அமெரிக்காவில் நடந்த கோல்டன் குலோப் விருதுகள் வழங்கும் விழாவில் பெண் ஒருவர் ஃபிஜி வாட்டர் கேர்ல் என்ற பெயரில் வைரலாகியுள்ளார்.

கோல்டன் க்ளோப்ஸ் 2019 - பிஜி வாட்டர் கேர்ள் (Fiji Water Girl)

உலகின் முன்னணி நடிகர் நடிகையர்கள் கலந்து கொண்ட அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கோல்டன் குளோப்ஸ் 2019 என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் திரைப்படம் என சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். இதில் நடிகர் நடிகையர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

Image result for fiji water girl kelleth

தாங்களாக சென்று நடிகர் , நடிகைகளிடம் தண்ணீர் வேண்டுமா என்று கேட்பதே அவர்களது வேலை, இப்படி இருக்க நடிகர்கள் நடிகைகள் புகைப்படங்களுக்காக புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுக்க, அனைத்து புகைப்படங்களிலும் பிரபலங்களுக்கு பின்னால் அட்டகாசமான சிரிப்புடன்  ஒரு பெண் காணப்பட்டார். தற்போது அந்த பெண் பிரபலங்களை விட அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். நீல நிற உடை அட்டகாசமான ஹேர் ஸ்டைலுடன் காணப்பட்ட அந்த பெண் பிஜி வாட்டர் கேர்ள் (fiji water girl ) என்று இணையதளத்தில் வைரல் ஆகி உள்ளார்.

கெல்லத் கத்பர்ட் :

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த பெண் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அந்த பெண்ணின் பெயர் கெல்லத் கத்பர்ட் என்றும், அமெரிக்காவில் மாடலிங் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்ததும் தெரிய வந்தது. இதனால் தான் கெல்லத் பிரபலங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வெளியாக இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த வேலையை செய்துள்ளார்.

Image result for fiji water girl arrow

இப்போது அந்த வேலை தான் அவரை பிரபலப்படுத்தியுள்ளது. பிஜி வாட்டர் கேர்ள் (Fiji Water Girl) என்று இணையத்தில் வைரலான கெல்லத் தற்போது தயாரிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது கெல்லத்தை இணையத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

 

 

News Counter: 
100
Loading...

youtube