ப்ளிப்கார்ட் சி.இ.ஒ பின்னி பன்சால் ராஜினாமா

share on:
Classic

ப்ளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்டின் நிறுவனர்களில் ஒருவரான பின்னி பன்சால், தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் 2018ம் ஆண்டு தொடக்கத்தில் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை சர்வதேச நிறுவனமாக வால்மார்ட் வாங்கியது. 

இதனிடையே பின்னி பன்சாலின் தனிப்பட்ட செயல்பாடுகள் மீது வால்மார்ட் நிறுவனம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தது. இதனை பின்னி பன்சால் மறுத்து வந்த நிலையில் இன்று ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அவரது ராஜினாமாவை வால்மார்ட் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vijay