Whats App -ஐ பாதுகாக்க நியூ அப்டேட்..!

Classic

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை வெளியிட உள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களின் அரட்டைகளை பிறரிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஃபிங்கர் பிரிண்ட்  லாக்கை அறிமுகம் செய்ய உள்ளது.இனி ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாகவே வாட்ஸ் ஆப்-பிற்குள் நுழைய முடியும்.

WABetaInfo-ன் படி வாட்ஸ் ஆப்- ன் இந்த புதிய அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டது.ஆண்ட்ராய்டு 2.19.3 பீட்டா வெர்சன் இயங்குதளத்தில் இருந்து இந்த வாட்ஸ் ஆப் புதிய அம்சம் முடக்கப்பட்டது. iOS இயங்குதளத்தில் Face Id மற்றும் Touch Id-யில் சில முன்னேற்ற பணிகள் காரணமாக இந்த அம்சங்கள் இன்னும் வெளியாகவில்லை.

வாட்ஸ் ஆப்- ல் Settings > Account > Privacy என்ற option மூலம் ஃபிங்கர்பிரிண்ட் வசதியை ஆன் செய்து கொள்ள முடியும். ஒருமுறை இந்த ஆப்ஷன் ஆன் ஆகிவிட்டால் போதும் ஒவ்வொரு முறையும் ஆப்பிற்குள் நுழைய ஃபிங்கர் பிரிண்ட் அவசியம்.இந்த வசதி கண்டிப்பாக வாட்சப்பின் பாதுகாப்பை இன்னும் அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

App icon, Notification என வாட்ஸ் ஆப்-ன் எந்த ஆப்ஷனை கிளிக் செய்தாலும் உள்ளே நுழைய ஃபிங்கர் பிரிண்ட் அவசியம். ஆனால் இது ஒட்டுமொத்த ஆப்-ஐ மட்டுமே பாதுக்கக்கும்.தனிப்பட்ட ஒருவரின் அரட்டையை மட்டும் இந்த வசதியின் மூலம் பாதுகாக்க முடியாது. இந்த வசதி வரும் காலங்களில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு வர உள்ளது (இதற்கு பிறகு iOS பயனாளர்களுக்கும் வர உள்ளது).

ஐபோன் மற்றும் சில ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி கொண்ட ஸ்மார்ட் போனிகளில் இந்த வசதி போனிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

News Counter: 
100
Loading...

youtube