இந்திய விமானிகள் மீது FIR பதிவு செய்ததா பாகிஸ்தான்..?

share on:
Classic

இந்திய விமானிகள் மீது பாகிஸ்தான் வனத்துறை சார்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெயிஷ் இ தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் கொள்ளப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இலக்கை தாக்குவது மட்டும் தான் தங்கள் கடமை என்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றும் விமானப் படையின் தலைமை தளபதி தெரிவித்தார். 

இந்நிலையில் இந்திய விமானிகள் மீது பாகிஸ்தான் வனத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை தங்கள் நாட்டின் கைபர் - பக்துன்குவா பகுதியில் நடத்திய தாக்குதல் நடத்தியதில் 12-க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்ததாக கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்களை கேட்டது  குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya