பயங்கர தீ விபத்தால் 3-வது மாடியிலிருந்து குழந்தைகளை தூக்கி வீசி காப்பாற்றிய பெற்றோர்

Classic

இலங்கையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பெற்றோர் தங்கள் குழந்தைகளை, 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசி காப்பாற்றும் காட்சி பதைபதைக்க செய்கிறது.

இலங்கையின் கண்டி நகரில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்றாவது மாடியில் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த போது, ஒரு அறையில் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளும் சிக்கிக்கொண்டனர்.

அதிலிருந்து தப்பிப்பதற்காக பெற்றோர் ஜன்னல் வழியாக தங்கள் 3 குழந்தைகளையும் தூக்கி வீசினர். மூவரையும் கீழே நின்ற மக்கள் பாதுகாப்பாக பிடித்தனர். இதையடுத்து, குழந்தைகளின் தந்தையான ராமநாதன், தாய் ராதிகா ஆகியோரும் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

aravind