பழனி முருகன் கோயில் அன்னதானக்கூடத்தில் தீ விபத்து

share on:
Classic

பழனி மலைக்கோயிலில் அன்னதான கூடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் ஆலயத்தில், நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்படுகிறது. இன்று அதிகாலை சமையல் கூடத்தில், சமையல்காரர் ஒருவர், கேஸ் சிலிண்டர் அனைத்தையும் ஆன் செய்து விட்டு சிறிது நேரம் கழித்து கேஸை பற்ற வைக்க முயற்சி செய்தார். காஸ் அழுத்தம் காரணமாக தீடீரென தீ குபிரென வேகமாக பரவியது. அவரின் முகம் மற்றும் இடது மார்பில் கீழ் பலத்த தீ காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan