விவசாயிகளின் ரூ.6,000 உதவித்தொகைக்கான முதல் தவணை மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் - மத்திய அரசு

share on:
Classic

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழகத்தில் தகுதியுடைய விவசாயிகளைக் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தகுதியான விவசாயிகளின் தகவல்கள் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகம், மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், திட்டத்தில் பயன்பெறத் தகுதியான விவசாயிகளின் தகவல்களை பெறும்போது, அவர்களின் ஆதார் எண்ணையும் பெற வேண்டும் என்றும், ஆதார் எண் அளிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரிகளும், பிற வருவாய்த் துறை உயரதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அதற்கு முன்பாகவே இந்த கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth