முருகனின் முதல் திருத்தலம்..!!

share on:
Classic

வரலாற்றில் முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது.

தமிழ் கடவுள் என்று உலகமெங்கும் வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி. 891 முதல் 907-ஆம் ஆண்டு வரை சோழ தேசத்தை ஆண்ட முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், இக்கோவில் சுமார் 1,100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.

ஒற்றைக்கண்ணூர் திருத்தலத்தில் அமைந்திருக்கும் முருகப்பெருமான் ஒரு கரத்தில் ஜபமாலையுடனும், மறு கரத்தில் சின்முத்திரையுடனும் காட்சி தருகிறார். அதுமட்டுமல்லாது முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

News Counter: 
100
Loading...

youtube