இன்று வானில் தோன்றும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..!

share on:
Classic

இந்த ஆண்டில் மிகப்பெரிய சூரிய கிரகணம் இன்று நடைபெறவுள்ளது. நியூசிலாந்து, சிலி, அர்ஜன்டைனா நாடுகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணம் தெற்கு அமெரிக்காவின் அர்ஜெண்டினா, சிலி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் நன்றாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் லா செரீனா என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி மதியம் 3.22 மணிக்கு தொடங்கி மாலை 5.46 மணிக்கு சூரிய கிரகணம் முழுமையடையும். இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு முழுமை அடைந்து அதிகாலை 2.14 மணிக்கு கிரகணம் முடிவடையும். இரவாக இருப்பதால் இந்தியாவில் இந்த நிகழ்வை காண வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan